பல கோடி பணம் பறிமுதல்... கரூர் அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை ஹைகோர்ட்!
மதுரை: கரூரில் கிட்டங்கியில் பல கோடி ரூபாய் பணத்தைப் பதுக்கி வைத்து விட்டு தப்பித் தலைமறைவாக இருக்கும் கரூரைப்சே சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூர் அய்யம்பாளையத்தில் வசித்து வந்தவர் அன்புநாதன். இவரது பூர்வீகம் மதுரையாகும். நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர் சில அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கிட்டங்கியிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் அடிக்கடி வெளியே போய் வந்து கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் போனது.

இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவின் பேரில் இந்த கிட்டங்கியில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் குதித்தனர். அப்போது அங்கு கோடிக் கணக்கில் பணம் சிக்கியதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 5 கோடி அளவுக்கு பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. ரூ. 4.77 கோடி அளவுக்குப் பணம் சிக்கியதாக மாவட்ட நிர்வாகம் கூறியது.
இந்த ரெய்டைத் தொடர்ந்து அன்புநாதன் தலைமறைவாகி விட்டார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்புநாதன் மிக முக்கியமான காவல்துறை அதிகாரியின் பார்வையில் பத்திரமாக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதியே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடினார் அன்புநாதன். அதை விசாரித்த நீதிபதி இன்று அன்புநாதனுக்கு தினசரி அய்யம்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் அளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications