வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனு தள்ளுபடி
சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
மதுரை: நெல்லை மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த வக்கீல் சுகந்தி வீடு தாக்கப்பட்ட வழக்கில், ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதே வழக்கில் கைதான நாடார் அமைப்பை சேர்ந்த ஹரிநாடார், சந்திரகுமார் மற்றும் ராமலிங்கம் ஆகியோரும் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி ஆஜராகி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்தவர்களுக்காக வக்கீல் சுகந்தி வழக்கு நடத்துகிறார்.
புகாரை வாபஸ் பெற செய்யும் முயற்சியில் சசிகலா புஷ்பா தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வக்கீல் சுகந்தி தடையாக இருப்பதாக கருதி அவரது வீட்டை தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினாலும், சசிகலா புஷ்பா தரப்பினருக்கு முன்ஜாமீன் வழங்கினாலும் விசாரணை பாதிக்கும். எனவே, இந்த மனுக்களை அனுமதிக்க கூடாது என்றார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசியல் காரணங்களுக்காக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். வக்கீல் வீடு தாக்கப்பட்ட சம்பவமே போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது. எனவே, மனுக்களை அனுமதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கின் தன்மை, போலீசாரின் விசாரணை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த மனுக்களின் மீது உத்தரவிடுவதாக கூறிய நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சசிகலா புஷ்பா முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனுக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.சசிகலா புஷ்பாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல் துன்புறுத்தல் வழக்கு
சசிகலா புஷ்பா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பணிப்பெண்கள் அளித்த புகாரில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சசிகலா புஷ்பா மற்றும அவரது குடும்பத்தினர் சார்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவும் கடந்த செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கைது
அதே நேரத்தில் முன்ஜாமின் மனுவில், அவரது கையெழுத்து தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகளில் ஏதாவது ஒரு வழக்கில் சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications