சென்னை வெள்ளம்: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது ஹைகோர்ட்
சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சென்னை ஹைகோர்ட் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சென்னையில் பெய்த மிகக்கனமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக நீரை திறந்துவிட்டதாலும், சென்னை நகரின் பல பகுதிகள் மூழ்கின.

நீதிபதிகள், அமைச்சர்கள் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில், சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தானாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளை எதிர்தரப்பாக சேர்த்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம்தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு, ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், மத்திய-மாநில அரசுகள் இடையே, நிவாரண பணிகளை ஒருங்கிணைப்பதில் ஒற்றுமையில்லை என்று, தலைமை நீதிபதி கண்டிப்பு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
