காவிரியில் மணல் அள்ள செப்.11 வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
காவிரியில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை: காவிரி ஆறறில் மணல் அள்ள வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதிவரை தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்புத் தெரிவித்து பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், கரூர் - திருச்சி இடையே உள்ள காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளப்படுவதால்,அங்குள்ள பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே ஒரு குழு அமைத்து காவிரியில் போதியளவு மணல் உள்ளதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும், காவிரி ஆற்றில் மணல் அள்ள மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கரூர் - திருச்சி இடையேயான காவிரியாற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை முழுவதுமாக விசாரித்த நீதிபதிகள் வரும் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி வரை மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications