முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை
மதுரை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.
நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
நெருக்கடி அதிகரித்ததால், மார்ச் 5ம் தேதி கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதற்கு அடுத்தநாளே அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
வேளாண் பொறியாளர் தற்கொலை வழக்கு விசாரணை, மார்ச் 9ம் தேதி சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தனி உதவியாளர்கள் மற்றும் வேளாண் துறையில் ஓட்டுநர் பணிகளை பெற்றவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏப்ரல் 5ம் தேதி காலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேளாண் அதிகாரி முத்துகுமராசாமி தற்கொலை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி, லஞ்சம் கேட்டதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும், தற்கொலை செய்த முத்துகுமாரசாமி தற்கொலை கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி ரவி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications