உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கவே கூடாது - தடையை நீக்க ஹைகோர்ட் மறுப்பு
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட்,பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க ஹைகோர்ட் மறுத்துவிட்டது.
சென்னை: கட்அவுட்கள், பேனர்கள் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று ஹைகோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். வழக்கு விசாரணையை திங்கட்கிழமையன்று ஒத்திவைத்தனர்.
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட்,பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஹைகோர்ட்டில் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோச்சண குமாரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணாநகரில் எனக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மெக்கானிக் கடை உள்பட பல்வேறு கடைகளை வாடகைக்கு விட்டுள்ளேன். இந்நிலையில், இந்த இடத்தில் தொடர்ந்து அரசியல் தலைவர்களின் பேனர், கட் அவுட் வைக்கப்படுகிறது.

இது வாடகைதாரர்களுக்கு இடையூறாக இருக்கிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டோம். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலரிடம் புகாரும் செய்துவிட்டோம்.
ஆனால், எந்தப் பயனும் இல்லை. மேலும், கட் அவுட், பேனர்களை அகற்றக் கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர்.
எனவேதான் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். எங்களுக்குச் சொந்தமான இடத்தில் கட் அவுட், பேனர்கள் வைப்பதை நிறுத்துமாறு உத்தரவிடவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டு வைக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இந்த மனு அக்டோபர் 24ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தூய்மையான சுற்றுப்புறத்தைப் பேணும் விதமாக குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் தேவையற்ற படங்களை வரைதலைத் தடுக்க வேண்டும்.
இது தொடர்பாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு திறந்தவெளிச் சட்டம்- 1959-ல் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களைக் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்யுமாறும் உத்தரவிடுகிறது.
அதையும் மீறி எப்போதாவது கட் அவுட், பிளக்ஸ், பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தாலும் உயிரோடு இருக்கும் நபர்களுக்கு இத்தகைய கட் அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது.
இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் அனைத்து டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து, யூனியன், முனிசிபாலிட்டி மற்றும் மாநகராட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது" என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்கள், பேனர்கள் அகற்றப்படாமல் இருந்தன. இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், இன்றே விசாரிக்க வேண்டும் என்பதில் என்ன அவசரம் என்று கேட்டு அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டனர்.
இந்த மனுவை நாளை விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறினர். சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் சத்தியநாராயணா, ஷேசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கட்-அவுட், பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் கொடுத்த விதிமுறைகளை அரசு மீறியுள்ளது என கண்டனம் தெரிவித்தனர். தடையை நீக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications