3 ஆண்டு சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு ஹைகோர்ட் அதிரடி தடை!
சென்னை: 3 ஆண்டுகால சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும் என்ற தனிநீதிபதி கிருபாகரனின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தடை விதித்துள்ளது. மேலும் அகில இந்திய பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர், குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளிமாநிலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என்று ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை சிறப்பு வழக்காக எடுத்து விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன் பல அதிரடி உத்தரவுகளை கடந்த 6-ந் தேதி பிறப்பித்திருந்தார். அதில் 3 ஆண்டுகால சட்டப்படிப்படை நிறுத்த வேண்டும்; அகில இந்திய பார் கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும்; கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையோரை சட்டப்படிப்பில் சேர்க்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீதிபதி கிருபாகரன் ஏற்கனவே கட்டாய ஹெல்மெட் உத்தரவை பிறப்பித்தவர். இந்த நிலையில் 3 ஆண்டுகால சட்டப் படிப்பை நிறுத்த வேண்டும்; பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த 3 ஆண்டுகால சட்டப்படிப்பை நிறுத்த வேண்டும்; பார்கவுன்சிலை நிர்வகிக்க குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு தடை விதித்தது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications