கட்டாய ஹெல்மெட்.. அடுத்து பொதுமக்கள் வாகனங்களுக்கு வருகிறது "ஸ்பீடு கவர்னர்"? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை : அதிகரித்து வரும் விபத்துக்களைத் தவிர்க்க பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை ஏன் பொருத்தக்கூடாது? என மத்திய அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், எந்த வாகனங்களுக்கு கருவி பொருத்தலாம் என மாநில அரசுகள் கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தலாம் என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், புதிய வாகனங்களுக்கும் கருவி பொருத்துவது பற்றி வரும் 28 ஆம் தேதி பதிலளிப்பதாகவும், தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் வேகத்தின் அளவை நிர்ணயிக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தாததால்தான் அதிக உயிரிப்புகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி ஏன் பொருத்தக்கூடாது?'' என கேள்வி எழுப்பினார்.
தற்போது பள்ளி வாகனங்களில் மட்டும் "ஸ்பீடு கவர்னர்" எனப்படும் வேகக் கட்டுப்பட்டுக் கருவி பொருத்த சட்டம் உள்ளது. இதனால் அந்த வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications