சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக என்.ஆதிநாதன் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றியவர் ஆதிநாதன். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். திருநெல்வேலி மாவட்டம் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தார்.

 Madras High Court gets new judge

பின்னர் கடந்த 2002ல் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தொழில் தாவா மேல் முறையீட்டு தீர்ப்பாய நீதிபதியாக பணியாற்றியவர். இவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இவர் அடுத்த வாரம் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என கூறப்படுகிறது. இவரது நியமனத்தை சேர்த்து தற்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+