உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் கேள்வி
உள்ளாட்சி தேர்தல் தாமதமாகி வருவது ஏன் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த இருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை என்றும், எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாகவும் கூறினார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி கிருபாகரன் முன்பு உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏன் இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மதியம் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பிற்பகலில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications