நான் ஒரு பாரம்பரியமான மட சாமி... மதுரை ஆதீனம்!
மதுரை: பாரம்பரியமிக்க மடத்தைச் சேர்ந்த நான், ஹெலிபேடு, கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது, சம்பிரதாயம் இல்லை. அதை, அவரும் விரும்பமாட்டார். அதனால்தான் நான் முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்திற்காக மதுரைக்கு வந்தபோது அங்கு போகவில்லை என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனம் ஆன்மீகத்தோடு அரசியலையும் கலந்து கட்டி அடிப்பதில் வல்லவர். அவ்வப்போது அரசியல் கருத்துக்களிலும் புகுந்து புறப்பட்டு வருபவர்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் அவர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நக்கீரனுக்கு அவர் அளிததுள்ள பேட்டி...

பிரச்சாரம் எப்படி இருக்கிறது?
என் பேச்சை கேட்கணும்னு, எல்லோரும் விருப்பமாக இருக்காங்க. நல்லா கூட்டம் கூடுது. நான் சொல்றதை கேட்கணும் என்ற உணர்வு, அவர்களுக்கு இருக்கு. ஆதரவு தருகின்றனர். சாதாரண மடாதிபதி இல்லை. பழமையான ஆதீன மடத்தைச் சேர்ந்த பீடாதிபதி வந்து பேசுறதை, அவர்கள் வரவேற்கிறாங்க.

மதுரை வந்த ஜெ.வை சந்திக்காதது ஏன்?
பாரம்பரியமிக்க மடத்தைச் சேர்ந்த நான், ஹெலிபேடு, கூட்டங்களில் ஜெ.,வை சந்திப்பது, சம்பிரதாயம் இல்லை. அதை, அவரும் விரும்பமாட்டார். அதனால் நான் போகவில்லை.

பிற இடங்களில் பிரசாரம் செய்கிறீர்களா?
இல்லை. ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். ஏப்ரல் 14ல், மதுரையில் பிரசாரம் செய்கிறேன். ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி பிரச்சாரம் செய்வேன்.

ஜெ.பிரதமராக சிறப்பு பூஜை செய்கிறீர்களா...
நான் தினமும் பூஜை செய்யும்போது, பிரார்த்தனை செய்து வருகிறேன்.

உங்கள் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள், பங்கேற்பதில்லையாமே?
இல்லை. யாராவது அப்படி சொல்வாங்க. உண்மையில், வேட்பாளர்கள், அமைச்சர்கள் எல்லாம், என் கூட்டத்தில் பங்கேற்கிறாங்க என்றார் ஆதீனம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications