பாரத மாதாவாக குஷ்பு... உற்றுப் பார்த்து அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம்!
மதுரை: மதுரையில் பாரத மாதாவாக குஷ்புவை சித்தரித்து, காங்கிரஸ் சார்பில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் போர்டை போலீசார் அகற்றியுள்ளனர்.
மதுரை உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில், இந்திய வரைபடத்துக்குள் சிங்கம் மீது பாரத மாதா கையில் தேசிய கொடியுடன் அமர்ந்திருப்பது போன்ற படம் இருந்தது.

ஜனவரி 26ம் தேதி வைக்கப் பட்ட இந்தப் பிளக்ஸ் போர்டை முதலில் யாரும் சரியாக கவனிக்கவில்லை. பின்னர், நன்றாக உற்றுப் பார்த்த போது, அதில் பாரதமாதாவாக சித்தரிக்கப் பட்டிருப்பது நடிகை குஷ்பு என தெரிய வந்தது.
இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஹரிகரன், ‘இந்த பிளக்ஸ் போர்டு மூலம் தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகார் அளிக்கப் பட்ட சில மணி நேரத்தில் உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகில் இருந்த சர்ச்சைக்குரிய அந்த பிளக்ஸ் போர்டு அகற்றப் பட்டு விட்டது.
-
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications