சிவனோட "ஜி.ஓ" வந்திருச்சு போல... 'அம்மா'வுக்காகப் பிரசாரம் செய்யப் போகிறாராம் மதுரை ஆதீனம்!
தஞ்சாவூர்: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை ஆதரித்து, அவர் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் தனக்கு வெற்றியைத் தந்த, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலேயே சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மற்ற கட்சிகளும் பிரபல வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் வாக்கு சேகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில், அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியமைப்பார்.
இதற்காக, தஞ்சை, வேதாரண்யம், ராமநாதபுரம், திருவாடானை, மதுரை, போடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
சிறப்பாகப் பணியாற்றி வரும் தேர்தல் அதிகாரிகளை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் மக்களின் மனதை மாற்ற முடியாது. ஆன்மிகவாதிகள் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எப்போதும் தனது செயல்களுக்கு 'சிவன் உத்தரவு' எனக் கூறுவது மதுரை ஆதீனத்தின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஜெயலலிதாவிற்காக பிரச்சாரம் செய்யவும் அவருக்கு உத்தரவு கிடைத்து விட்டது போல.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications