மதுரையில் பயங்கரம்.. அதிமுக கவுன்சிலரை வெட்டிக் கொன்ற 10 பேர் கும்பல்
மதுரை: மதுரையில் நேற்றிரவு மாநகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவர் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் அந்த பகுதியான மாநகராட்சி 51 ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். இந்நிலையில் இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து அங்கு இறங்கியது. திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து விஜயராகவனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த விஜயராகவன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார். இந்த பயங்கர கொலை சம்பவம் முனிச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அரசியல் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட விஜயராகவனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவரும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். 51 ஆவது வார்டு முன்னாள் அ.தி.மு.க. வட்ட செயலாளர். தற்போது கைத்தறி வாரியத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications