மதுரை வருகிறார் அழகிரி... ஆர்வம் + எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரை செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் அழகிரி ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திமுகவின் தென் மண்ட அமைப்புச் செயலாளராக இருந்தவர் அழகிரி. அவரது ஆதரவாளர்களின் செயல்பாட்டால் அடுத்தடுத்து 10 பேரை கட்சியை விட்டு நீக்கியது திமுக தலைமைக் கழகம். மேலும் மதுரை திமுக நிர்வாகிகளும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த அழகிரி கட்சித் தலைவர் கருணாநிதியிடம் முறையிட்டார்.

இருப்பினும் அழகிரி ஆதரவாளர்களின் செயல்பாடு தொடரவே அழகிரியையே கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கி விட்டது திமுக. இதனால் அழகிரி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியிருந்தார் அழகிரி. இந்த நிலையில் இன்று அவர் மதுரை செல்கிறார். அங்கு தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
மேலும் வருகிற 30ம் தேதி அழகிரி பிறந்த நாள் வருகிறது. அதை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக கொண்டாடுவோம் என்று அழகிரி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். எனவே இன்றோ அல்லது பிறந்த நாளன்றோ தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அழகிரி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன், திமுக தானாகவே தோற்கும் என்று ஏற்கனவே அழகிரி கூறியுள்ளார். எனவே அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து அழகிரி ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற அரசியல் கட்சியினர் தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications