குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த மதுரை சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
குற்றாலம்: குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானான்.
மதுரை விளாங்குடியை சார்ந்த பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு இன்று ஒரு வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளார். பின்னர் குற்றாலம் மெயின், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளித்து விட்டு கடைசியாக பழைய குற்றாலம் அருவியில் குளித்து விட்டு மத்தாளம் பாறை என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் தோப்பில் குடும்பத்தோடு ஓய்வு எடுத்துள்ளனர்.

அப்போது அவரது 11வயது மகன் விக்னேஷ் என்பவன் மலம் கழித்துவிட்டு அந்த தோப்புக்குள் இருந்த கிணற்றில் இறங்கி கால் கழுவ சென்றுள்ளான். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து விட்டான். இதில் நீரில் மூழ்கி சிறுவன் பலியானான்.
கால் கழுவ சென்ற மகனை காணாமல் கிணற்று பக்கம் சென்று பார்த்த தந்தைக்கு மகன் கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அலறினார். தகவல் அறிந்து குற்றாலம் போலிசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications