மு.க.அழகிரி மீதான வழக்கில் "அரசியல்" இல்லை, ரத்து செய்ய முடியாது... நீதிபதி உத்தரவு
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான நில அபகரிப்பு வழக்கில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிய மு.க.அழகிரியின் கோரிக்கையையும் அவர் நிராகரித்து விட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது கடந்த 26ம் தேதி நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனது, தயா பொறியியல் கல்லூரிக்கு கோவிலுக்கு சொந்தமான 44 செண்ட் நிலத்தை அபரித்தார் அழகிரி என்று குற்றச்சாட்டில் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்ற அழகிரி, தன் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு பொய் வழக்கு என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் தன் மீது இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரி தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரியதை நீதிபதி கிருபாகரன் நிராகரித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த வழக்கில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தவிர, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நில அபகரிப்பு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனுதாரர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
மேலும், அழகிரி மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை 16 வாரங்களுக்கு கீழ் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு அழகிரிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications