தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது கலெக்டர் எங்கே சென்றிருந்தார்? -ஹைகோர்ட் சரமாரி கேள்வி
துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே சென்றிருந்தார் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் மக்கள்அமைதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியபோது மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
அப்போது 144 தடையை மீறி பேரணி சென்றதால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையும் மீறி ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் அடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு
இதையடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

அமைதியாக...
இது தொடர்பாக மதுரை ஹைகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைதியாக நடந்த 99 நாள் போராட்டத்தின் வீடியோவை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

ஆட்சியர் எங்கே
அதுபோல் தூத்துக்குடியில் 99 நாட்கள் நடந்த போராட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கி விவரங்களையும் அறிக்கையாக அளிக்க போலீஸுக்கு உத்தரவிட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார் என வினவினர்.

ஜூலை 18க்கு ஒத்திவைப்பு
எந்தெந்த வகை துப்பாக்கிகள் கலவரத்தின்போது பயன்படுத்தப்பட்டன? என்பதையும் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications