விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க மதுரை ஹைகோர்ட் கிளை இடைக்காலத் தடை !
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டத்தில் அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 10.8.2012 அன்று தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் குறித்தும் தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசினார். இது தொடர்பாக 26.11.12 அன்று தஞ்சை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், திண்டுக்கல், சிவகங்கை, நாகர்கோவில், தஞ்சாவூர், நெல்லை மாவட்ட நீதிமன்றங்களில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி விஜயகாந்த் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012-ஆம் ஆண்டில் தஞ்சை கீழவாசல் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் குறித்து தாம் அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், வழக்கின் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இதே போல திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜயகாந்த் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நீதிபதி, தஞ்சை, திருநெல்வேலி, கன்னியாகுமரி,திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் விசாரணையின் போது ஆஜராவதற்கு விஜயகாந்த்திற்கு விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications