ஜெயலலிதா வரவேற்பு பேனர்! உடனடியாக அகற்ற ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: ஜெயலலிவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகருக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மதுரையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை அவசர வழக்காக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜரானார். அரசு தரப்பில் அனுமதி பெற்றுதான் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் வழக்கு தொடர்ந்த பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், எந்த ஒரு இடத்திலேயும் முறையான அனுமதி பெற்று வைக்க வாய்ப்பு இல்லை. ப்ளக்ஸ் பேனர்களால் பொதுமக்களின் போக்குவரத்திற்கும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக அந்த ப்ளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று தனது தரப்பு வாதத்தில் தெரிவித்தார்.
இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்குமாறு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கூறியது. அப்போது அரசு அனுமதி பெற்ற இடத்தை தவிர, அனுமதி பெறாத இடத்தில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை எடுத்துவிடுவதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications