மதுரையில் கொட்டிய மழை... மீனாட்சி கோவிலுக்குள் பாய்ந்தோடிய வெள்ளம்- வீடியோ
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் மழை நீர் வெள்ளமாக பாய்ந்தோடியதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கொடிமரம் அமைந்துள்ள பகுதிவரை வெள்ளநீர் பாய்ந்தோடியது. மழைநீரினால் கோவில் தெப்பக்குளம் நீர்மட்டம் அதிகரித்தது.
மதுரை நகரிலும், மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வருகிறது
புதன்கிழமையன்று இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் மதுரையில் முக்கிய பகுதிகளான பெரியார், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரையில் பெருக்கெடுத்த வெள்ளம்
மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரைவீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து, மீனாட்சிஅம்மன் கோவிலுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

கோவிலுக்குள் பாய்ந்தோடிய வெள்ளம்
ஆடி வீதியில் பழைய திருக்கல்யாணமண்டபம், வடக்காடிவீதி வழியாக சுவாமிசன்னதி கொடிக்கம்ப பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் புகுந்ததால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் திக்குமுக்காடித்தான் போனார்கள்.

அதிகரித்த தெப்பக்குளம் நீர்மட்டம்
கோவில் முழுவதும் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை தங்கள் தலைமேல் சுமந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பக்குளத்தின் நீர்மட்டமும் உயர்ந்தது. கோவிலுக்குள் தேங்கியமழைநீரை அகற்ற இரவோடு இரவாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுத்தம் செய்த ஊழியர்கள்
மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கோவிலை சுற்றியுள்ள வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றப்பட்டன. அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கோவிலின் உள்பகுதி முழுமையாக துப்புரவு பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

விருது பெற்ற மீனாட்சியம்மன் கோவில்
இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே தூய்மையான கோயில் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்ந்தெடுக்கப் பட்டது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான விருதை மாவட்ட கலெக்டர் வீரராகராவ் பெற்றுக்கொண்டார்.இந்த நிலையில் மழை நீர் உள்ளே புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வைரலான வீடியோ
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளநீர் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானது. இது குறித்த வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications