தமிழ் உட்பட 22 மொழிகளை அலுவல் மொழியாக்கும் வழக்கு – மதுரை ஹைகோர்ட் தள்ளுபடி!
மதுரை: தமிழ் உட்பட 22 மொழிகளை தேசிய அலுவல் மொழியாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை வழக்கறிஞர் ராஜமாணிக்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
டெல்லி, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம் தவிர மற்றவை இந்தி பேசாத மாநிலங்கள். அப்படி உள்ள நிலையில், மத்திய அரசின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உட்பட 22 மாநில மொழிகளை தேசிய மற்றும் அலுவல் மொழியாக அறிவித்திருக்க வேண்டும்.
தமிழகம், மேற்கு வங்க ஹைகோர்ட்களில் அந்தந்த மாநில மொழிகளை, வழக்காடு மொழிகளாக்க வேண்டும் என மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாநில மொழிகளை படிப்படியாக அலுவல் மொழியாக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தி பேசாத மாநில மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம் உட்பட, 22 மொழிகளையும் தேசிய மற்றும் அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் கொண்ட குழு பிறப்பித்த உத்தரவில், "அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என தெரிவித்து உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications