நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார்.
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் மகேஸ்வரி (வயது 25). மகேஸ்வரி நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி அங்கு எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார்
மார்ச் 30ம் தேதி இரவு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.

மாணவிகள் ஓட்டம்
இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற பயங்கரமாக சத்தம் கேட்டது. அப்போது யாரோ ஒரு பெண் அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதாம். இதையடுத்து அங்கிருந்த மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்துள்ளார்கள்.

சிகிச்சை
பல்கலைக்கழக விடுதியின் தரைதளத்தில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மகேஸ்வரியை கொண்டு சென்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

போலீசார் விசாரணை
அங்கு மாணவி மகேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை
இதற்கிடையே சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார்கள். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications