மதுரை: ஆசிரியர் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் ”ஜாக்பாட்”– 4 குழந்தைகள் பிறந்ததால் மகிழ்ச்சி!
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் அகமத். அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சஹிதா. இவர்களுக்கு ஏற்கெனவே ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், செயற்கை கருத்தரித்தல் மூலம் சஹிதா கர்ப்பம் அடைந்தார். எட்டு மாத கர்ப்பிணியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திங்கள்கிழமை காலையில் 2 பெண், 2 ஆண் என 4 குழந்தைகள் பிறந்தன. குழந்தைகள் அனைத்தும் 1.62 முதல் 1.09 கிலோ கிராம் எடையுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்ததை அடுத்து தீவிர சிசு நலப் பிரிவில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சஹிதாவுக்கு ரத்த அழுத்தமிருந்ததால் அவருக்கு கர்ப்பகால அதிதீவிர திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததைக் கேள்விப்பட்ட மற்ற நோயாளிகள் குழந்தைகள் நலப் பிரிவுக்கு சென்று குழந்தைகளை ஆர்வமுடன் பார்த்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications