மதுரை அருகே கொடூரம்.. வீட்டு வாசலிலேயே வக்கீலுக்கு சரமாரி வெட்டு...நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மதுரை அருகே வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் அவரது வீட்டு வாசலில் வைத்தே சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
மதுரை : மதுரை மேலூர் பகுதியில் வழக்கறிஞர் ரவிச்சந்திரனை அவரது வீட்டு வாசலிலேயே வைத்து மர்ம நபர்கள் சரமாறியாக வெட்டி சாய்த்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலூர் நாகம்மாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன். நேற்று இரவு வெளியில் சென்று விட்டு ரவிச்சந்திரன் வீடு திரும்பியுள்ளார்.
தனது இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டு கேட்டை தாண்டிய போது வாசலிலேயே காத்திருந்த மர்ம நபர் ஒருவர் ஹாக்கி ஸ்டிக்கால் பின் பக்கமாக ரவிச்சந்திரனை தாக்கியுள்ளார். இதனைத் தொடர்து வந்த மற்றொரு நபர் வாழை மரத்தை வெட்டுவது போல அசால்ட்டாக தான் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தப்பியோட்டம்
இதில் நிலை தடுமாறி ரவிச்சந்திரன் வீட்டு வாசலிலேயே சரிந்து விழுந்தார். இதனையடுத்து தாக்குதலை அரங்கேற்றியவர்கள், சாலையில் தயாராக காத்திருந்த வாகனத்தில் ஏறி புறப்பட்டனர்.

அதிர வைக்கும் காட்சிகள்
மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்திலேயே சர்வசாதாரணமாக அரங்கேறியுள்ள இந்த கொலை வெறித்தாக்குதல் ரவிச்சந்திரன் வீட்டு வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலை வெறித்தாக்குதல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரத்த வெள்ளம்
வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனை அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தார் மீட்டு மேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதல்கட்ட சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக ரவிச்சந்திரன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
ரவிச்சந்திரன் மீது முன் விரோதம் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதா, அல்லது பணம் கொடுக்கல் வாங்கலில் ஏதேனம் பிரச்னையா என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications