நரேந்திர மோடி தேநீர் விடுதி மற்றும் பலசரக்கு அங்காடி.. இது மதுரையில்
மதுரை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் டீக்கடைகள் மற்றும் பலசரக்குக் கடைகளைத் திறக்க ஆரம்பித்துள்ளன பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள்.
மோடி டீ விற்றவர் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடிக்கப் போக அதையே பிடித்துக் கொண்டு டீக்கடைகளைத் தொடங்கி அதன் மூலம் மோடி ஆதரவுப் பிரசாரத்தை பாஜகவினர் ஆரம்பித்து வி்ட்டனர்.
இப்போது பாஜகவினரின் பிரசாரத்தில் டீக்கடைக்காரர்களும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கவும் ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் மதுரையில் பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சார்பில் டீக்கடைகள், பலசரக்குக் கடைகளை தொடங்கி அதன் மூலம் மோடி ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக நரேந்திர மோடி பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இவர்கள், மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதியில் நூதன முறையில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், நரேந்திர மோடி பெயரில் நகைக்கடை, சலூன் கடை, டீக் கடை, பலசரக்குக் கடைகள் துவக்கப்படுகின்றன.
கீரைத்துறை, செல்லூர், பச்சரிக்காரத் தெரு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மோடி பெயரில் கடைகள் திறக்கப்படுகின்றன. படிப்படியாக வரும் நாள்களில் ஊரகப் பகுதிகளில் ஊர் ஊருக்கு மோடி பெயரில் கடைகள் திறக்கப்படும் என்றும், அதன் மூலம் நரேந்திர மோடியின் சாதனை, பாஜகவின் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படவுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications