அடக்கம் செய்ய பணமில்லை... மகன் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய ஏழைத் தாய்
மதுரை: மூளைக் காய்ச்சலால் மரணமடைந்த மகனின் உடலை அடக்கம் செய்ய போதிய பணம் இல்லாததால், அதனை மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானம் செய்துள்ளார் ஏழைத் தாய் ஒருவர்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் சண்முகம் என்பவரது மனைவி வனிதா. கணவரைப் பிரிந்த வனிதா தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்தபடி, தனது 16 வயது மகன் நவீன்குமாருடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நவீனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார் நவீன். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நவீனுக்கு மூளைக் காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தனர். இதனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் நவீன்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி நவீன் கடந்த வெள்ளியன்று இரவு உயிரிழந்தார். மகனின் இறுதிச் சடங்குக்குக் கூட பணம் இல்லாமல் தவித்த வனிதா, நவீனின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து நவீனின் உடலை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையினர் பெற்றுச் சென்றனர்.
இது குறித்து தாயார் வனிதா கூறுகையில், ‘எனது மகனுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதால் பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தேன். கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டசபை உறுப்பினரிடமும் முறையிட்டேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன் எனது மகன் இறந்தான். ஆனால், அடக்கம் செய்ய வழியில்லாததால் மகனின் உடலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டேன். அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை' எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications