ஒவ்வொரு நாளும் சாகலாம் போலிருக்கு.. மனைவியை நினைத்து உருகும் மதுரை முத்து
சென்னை: மனைவியின் திடீர் மரணத்தால் நிலை குலைந்து போயுள்ள காமெடி பேச்சாளர் மதுரை முத்து, ஊரையே சிரிக்க வைக்கும் தன்னால் ஒரு நிமிடம் கூட சிரிக்க முடியவில்லை' என தன் பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் அவர், சிறந்த நகைச்சுவை பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கார் விபத்தில் அவரது மனைவி லோகா பரிதாபமாக உயிரிழந்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை முத்து அமெரிக்கா சென்றிருந்தபோது இந்தத் துயர சம்பவம் நடைபெற்றது. மதுரை முத்து - லோகாவுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது குழந்தைகளுடன் வசித்து வரும் முத்து, மனைவியின் பிரிவு குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க
அதில் அவர் கூறியிருப்பதாவது... அன்புள்ள நட்புக்காக,,,,,,,, மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க, 8 ஆண்டுகளில் என் மனைவி இறந்த விடுவாள் என்று தெரியவில்லை, தெரிந்தால் என் அன்பை அதிகம் காட்டிஇருப்பேன். இன்னும் கொஞ்சி இருப்பேன்.

என் குழந்தை என்ன பாவம் செய்தது
இறப்பு எல்லாருக்கும் உண்டு என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் என் சின்ன குழந்தை என்ன பாவம் செய்தது. இது கனவாக மாறும் என்று காத்துருந்தென் ஒன்றையும் காண்ல. என் சின்ன மகள் அம்மா பொருளை எல்லாம் சேர்த்து வைக்கிறாள் அம்மா வந்ததும் தருவாலம் அம்மா ட்ட. என்ன செய்ய,,,, ஒவ்வொரு நாலும் சாகலம் என்று இருக்கு.

பாவி நான்
எனக்கு ஒரு விபத்தில் துக்கம் தாங்காம என் மனைவி இறக்க போனால்.ஆனால் என் மனைவிக்கு அதனையும் செய்யல பாவி நான். இந்த 2 குழந்த இல்லை என்றால் எப்போது என் மனைவிடம் போய்ருபென்.

ஒரு நிமிடம் கூட சிரிக்க முடியலை
நாள் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் மக்களை சிரிக்கவைக்கும் நான் ஒரு நாள் கூட ஒரு நிமிடம் சிரிக்க முடியல....என் முதல் ரசிகை போய்விட்டால் அழகிய மனைவி போய்விட்டால்.

எல்லாம் தொலைந்தது
என் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் ......தொலைந்த்து..... இவ்வளவு நாள் நண்பர்கள் ஆறுதலினால் ஓடியது வாழ்க்கை இனி........ என தனது விரக்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கூடவே, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் இந்தப் பதிவுடன் சேர்த்து வெளியிட்டுள்ளார் மதுரை முத்து.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications