மதுரையில் எண்ணெய் வியாபாரி வீடு மீது குண்டுவீச்சால் பரபரப்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை எண்ணெய் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கிருந்த கார் நாசமானது. பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் பாலன். இவர் எண்ணெய் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

 In Madurai unknown person threw petrol bomb on businessman Balan's house

இதில் வீட்டிலிருந்த காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த போலீசார் பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவைப் பகுதி மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த கார் மட்டும் சேதமடைந்தது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Madurai unknown person threw petrol bomb on businessman Balan's house and police registered a case and searching them.
Please Wait while comments are loading...