மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.. பாய்ந்து தடுத்த போலீஸ்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரத்துறையைச் சேர்ந்தவர் விஜயா. ஆசிரியராக பணியாற்றும் விஜயாவிடம் அவருக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தை 18 லட்சம் கொடுத்து கிரையம் முடிப்பதற்காக ராமலட்சுமி என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் கடந்த 6 மாதமாக கிரயம் செய்யாமல் விஜயா மோசடி செய்து வருவதாக புகார் கொடுத்தும் தல்லாகுளம் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது மதுரை கலெக்டரிடம் புகார் கொடுக்க வந்தார் ராமலட்சுமி.
ஆனால் கலெக்டரிடம் மனு கொடுக்க விடாமல் போலீஸார் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி, கூடவே கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார்.
இதையடுத்து அதிர்ந்து போன போலீஸார் அவரை தடுத்து விசாரித்தனர். இதன் பின்னர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications