ஜெ. பிறந்தநாள் கொண்டாட்டம்.. பாதுகாப்பு கேட்கிறது ஓபிஎஸ் அணி… கமிஷனரிடம் மதுசூதனன் மனு
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனன் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொந்த தொகுதியில் நாளை நலத்திட்டங்களை வழங்குகிறார் ஓபிஎஸ்.
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவரான மதுசூதனன் தங்கள் அணிக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுத்துள்ளார். நாளை ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் என்பதால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதால் பாதுகாப்பு தேவைப்படுவதாக மதுசூதனன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளாகும். அவர் இறந்த பின்னர் வரும் முதல் பிறந்த தினம் இது. மேலும், ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக பிரிந்து நின்று சண்டை போட்டு வரும் நிலையில், தனித்தனி அணியாக ஜெயலலிதா பிறந்த தினத்தைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான ஆர்.கே. நகரில் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தைக் கொண்டாட்ட திட்டமிட்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனையடுத்து, தங்கள் அணிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி அதிமுகவின் மூத்த தலைவரான மதுசூதனன் சென்னை கமிஷனர் ஜார்ஜை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications