மகாளய அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை போன்ற நாட்களில் கூடுதலாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வருடத்திற்கு மூன்று அமாவாசை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசையும் முக்கியமனதாக பார்க்கப்படுகிறது.

Mahalaya Amavasai special worship in temples by offering darpanam to ancestors

மூன்று அமாவாசை தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்த குவிந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நீண்ட வரிசையில் நின்று மணிக்கணக்கில் காத்திருந்து வழிபாடு நடத்தி செல்வதை காண முடிகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாகப்பட்டினம் வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர். திருவள்ளூர் வீர ராகவ பெருமாள் கோவில் குளக்கரையில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+