"மகாராஷ்டிரா முதல்வர் யாரு".. அன்னிக்கே சொல்லிருக்கார் பாருங்க "ஆண்டவர்".. வைரலாகும் வீடியோ!
கமலின் வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் காட்சி வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், நாடே உற்று நோக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வு நடந்து வருகிறது.. இந்த சமயத்தில், கமல் நடித்த ஒரு திரைப்பட காட்சியை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அதனை இப்போது வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.
குதர்க்கம் என்றும் சொல்லிவிட முடியாது.. துடுக்குத்தனம் என்றும் சொல்லிவிட முடியாது.. இவை இரண்டுக்கும் நடுவில் அறிவார்ந்த பதிலை பல சமயங்களில் சொல்லிவிடுவார் கமல்ஹாசன்.கடந்த 2017-ல் யாதும் தமிழே என்ற நிகழ்ச்சியில் கமலிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
"கேரளா முதல்வரை போய் சந்திச்சீங்களே... இங்க இருக்கிற தமிழக முதல்வரை சந்திக்க மாட்டீங்களா?" என்று கேட்டனர். அதற்கு கமல், "இங்கேயும் எனக்கு சந்திக்க ஆசைதான். ஆனா போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம்தான்" என்றார்.

3 முதல்வர்
கமல் இதை விளையாட்டாக சொன்னாலும், உண்மையிலேயே அந்த குறுகிய காலகட்டத்தில், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 3 முதல்வர்கள் அரியணை ஏறியதை தமிழகம் கண்கூடாக கண்டது! இப்போதும் அப்படிப்பட்ட ஒரு கேள்விதான் கமலிடம் கேட்கப்படுகிறது. இதற்கும் துடுக்குத்தனமாகவே ஒரு பதில் வருகிறது.. ஆனால், இது நிஜத்தில் இல்லை.. சினிமாவில்!
வறுமையின் நிறம் சிவப்பு
1980-ம் ஆண்டு வெளிவந்த "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற படத்தில் கமல் வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில் கமல் வேலை தேடி ஒரு இன்டர்வியூ செல்வார். அங்கிருப்பவர்கள், மஹாராஷ்டிரா முதல்வர் யார்? என்ற கேள்வியை கேட்பார்கள்.

சரத்பவார்
அதற்கு கமல், "எப்போதைய முதல்வர்? இன்னைக்கா? நேற்றா? அல்லது நேற்று முன்தினமா? ஏன்னா இங்க தினம் ஒரு முதலமைச்சர் மாறிக் கொண்டே இருக்கிறார்" என்று பதிலளிப்பார். கமல் சொன்னபடி, அன்றே மகாராஷ்டிரா கலகலத்து காணப்பட்டது.. இன்று போலவே அன்றும் கலக்கி கொண்டிருந்தது சரத்பவார்தான்.

வைரல் சீன்
இப்படி ஒரு காட்சியை படத்தில் புகுத்திய இயக்குனர் சிகரத்தின் துணிச்சலுக்கு ஆயிரம் முறை கைகுலுக்கலாம். நேற்றிரவு இருந்த நிலவரம் மாறி, பொழுதுவிடிந்ததுமே அரசியல் நிகழ்வு தலைகீழாகிவிட்ட நிலையில், கமல் நடித்த இந்த காட்சியை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். கமல் கேட்ட கேள்விதான் நமக்கும் கேட்க தோன்றுகிறது.. "மகாராஷ்டிரா முதல்வர் யார்?" என்று!!
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications