கங்கையைவிட காவிரியே உயர்ந்தவள்... ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கங்கை நதி புண்ணிய நதியாக போற்றப்படும் நிலையில் கங்கையை விட காவிரியே உயர்ந்த நதி என்றும் புண்ணிய நதி என்றும் பகவான் மகாவிஷ்ணுவே தன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி நதியில் மாசி மாதத்தில் புனித நீராடினால் புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

[மகாமகம் படங்கள்]

மாசி மாதத்தில் குரு சிம்ம ராசி யிலும், சூரியன் கும்ப ராசியிலும் வரும்போது முழு நிலவு நாளில் மக நட்சத்திரமும் ரிஷப லக்னமும் கூடி வரும் நாளே மகாமகத் திருநாள் எனப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி எனப்படும் புனித நீராடல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகத் தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. மகாமகப் பெருவிழா கொடி யேற்றத்துக்குப் பிறகு மகாமகக் குளத்தில் ஆதீனகர்த்தகர்கள் புனித நீராடி, தீர்த்தமாடல் நிகழ்வை பகல் 1.30 மணியளவில் தொடங்கிவைத்தனர்.

இதையொட்டி ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.பிப்ரவரி 14ம் தேதி ஞாயிறன்று வைணவத் தலங்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராம சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 5 கோயில்களில் கருடக்கொடியேற்றப்பட்டது.

மகாமகம் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று நடைபெறுகிறது. கும்பகோணத்தில் உள்ள 12 சிவன்களுக்கு மகாமக குளத்திலும், 5 பெருமாள்களுக்கு காவிரி சக்கர படித்துறையிலும் தீர்த்தவாரி நடைபெறும். சாரங்கபாணி பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகள் மட்டும் காவிரிக்கரையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்கிறார்.

நவநதி கன்னிகளைகள்

நவநதி கன்னிகளைகள்

புராணத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. ஒரு முறை, நவ நதி கன்னிகைகளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கந்தர்வன் ஒருவன் அவர்களைக் கடந்து செல்லும் போது அவர்களை வணங்கிச் சென்றான். அந்த மரியாதை தனக்குத்தான் என்று ஒவ்வொரு நதி கன்னியும் சொல்ல, கங்கை அதை ஏற்கவில்லை. தான்தான் மிகவும் சிறந்தவள் என்றும் தனக்கே அந்த மரியாதை என்றும் கூறினாள்.

விஷ்ணுவிடம் முறையிட்ட காவிரி

விஷ்ணுவிடம் முறையிட்ட காவிரி

கங்கையின் கருத்தை மற்ற நதி கன்னிகள் ஏற்றாலும் காவிரி மட்டும் ஏற்கவில்லை. அவள், பிரம்மாவிடம் சென்று முறையிட்டாள். பிரம்மாவோ கங்கை கூறியதே சரி என்றார். அதை ஏற்காத காவிரி விஷ்ணுவிடம் நியாயம் கேட்டு தவமிருந்தாள். அவளுடைய தவத்துக்கு இரங்கிய விஷ்ணு, காவிரியே, கவலை வேண்டாம். நீதான் மிகவும் புனிதமானவள் என்கிறார்.

காவிரியே புனிதமானவள்

காவிரியே புனிதமானவள்

''வாமன அவதாரத்தில் நான் எடுத்து வைத்த இரண்டாவது அடியில், கட்டை விரல் பிரம்ம லோகத்தை நோக்கி இருந்தது. பிரம்மா, எனக்கு பாத பூஜை செய்தபோது கீழே விழுந்த நீர்த்திவிலைகள்தான் கங்கை நதி. ஆனால், தலைக்காவிரி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை, மைசூர் அருகில் ஸ்ரீரங்கப்பட்டினம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், தஞ்சாவூர் அருகில் கோயிலடியில் ஸ்ரீஅப்பக்குடத் தானாகவும், கும்பகோணத்தில் ஸ்ரீசாரங்கபாணியாகவும், பூம்புகார் அருகில் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதராகவும் எழுந்தருளி உள்ளேன்.

தீர்த்தவாரி

தீர்த்தவாரி

ஒவ்வொரு தலத்திலும் என் திருவடி இருக்கும் இடத்தில் நீயும், என் திருமுகம் இருக்கும் இடத்தில் உன்னுடைய ஒவ்வொரு கிளை நதியும் எனக்கு மாலையைப் போல் அலங்கரிக்கிறீர்கள். திருவடி இருக்கும் திசையில் பாயும் காவிரியான உன்னிடத்தில்தான் என்னுடைய தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
ஆகவே, கங்கையைவிட நீயே உயர்ந்தவள், புனிதமானவள்'' என்று காவிரியைத் தேற்றினார்.

காவிரியில் நீராடுவது புண்ணியம்

காவிரியில் நீராடுவது புண்ணியம்

காவிரியில் நீராடுவது புண்ணியம். அதிலும் மாசி மகம், மகாமகம் காலங்களில் நீராடுவது மிகவும் புண்ணியம். அதனால்தான், காவிரியே சிறந்தவள் என்பதை உறுதி செய்யும் விதமாக பெருமாள் காவிரி படித்துறையில் எழுந்தருள்கிறார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+