Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் குடும்பத்தினர் இனி ஒற்றுமையாக இருப்போம்: மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி பதவி கிடைத்த சந்தோசத்துடன், நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டே தொலைபேசி அழைப்புகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜான்சிராணி.

ஊடக வெளிச்சம், சட்டசபையில் சலசலப்பு என பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தவர் விஜயதாரணி, மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் கடைபிடித்த மோதல் போக்கினால் திடீரென்று பதவியை விட்டு நீக்கப்பட்டார்.

Mahila Congress president Jhansi Rani interview

முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவருமான மறைந்த ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி, தமிழக மகிளா காங்கிரஸ்கட்சியின் தலைவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாட்டி வழியில் கட்சி தலைவர்களுடன் நட்பு உணர்வுடனும், ஒற்றுமையுடனும், இணக்கமாக செயல்படுவேன் என்று தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார் ஜான்சிராணி.

நம்முடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு உற்சாகத்துடன் நம்மிடையே பேசினார்.

பதவி அளித்தவர்களுக்கு நன்றி

எனக்கு இது எதிர்பாராத சந்தோசம். திண்டுக்கல்லில் கிளைச்செயலாளராக இருந்திருக்கிறேன். மகிளா காங்கிரஸ் பதவியை எனக்கு அளித்த சோனியாஜி, ராகுல்ஜி, ஷோபா உஷா, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!.

என்னுடைய பாட்டிக்கு கிடைத்த மரியாதை

எங்களுடையது காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பம். காங்கிரஸ் கட்சியைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் சொல்லி சொல்லி வளர்த்தவர் என் பாட்டி பொன்னம்மாள். அவருக்கு கொடுத்த மரியாதையாக நான் இதை கருதுகிறேன். என் பாட்டிதான் எனக்கு அரசியலில் ரோல் மாடல். அவரைப் பார்த்துப் பார்த்தே நான் என் அரசியல் பயணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒற்றுமையாக செயல்படுவோம்

என் பாட்டி கட்சித்தலைவர்கள் அனைவரிடமும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் பழகினார். அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியவர், அனைவருக்கும் பிடித்தமானவர். நூறு சதவிகிதம் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்தவர். நான் அவருடைய பேத்தியாயிற்றே. 200 சதவிகிதம் நன்றாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பேன்.

சுமையாக கருதவில்லை

இந்த பொறுப்பு என்னை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு. நான் நன்றாக செயல்படுவேன். நிச்சயம் இது எனக்கு சுமையில்லை.

கட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் எதையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறேன். என்னை நம்பிக் கொடுக்கப் பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன், அதன்படி செயல்படுவேன்.

அரசியலுக்கு வரணும்

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். குறிப்பாக படித்த பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ஜான்சி ராணி, எனக்கு கிடைத்துள்ள இந்த பதவி தலித் சமுதாயத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே நினைக்கிறேன் என்றார்.

கட்சி என்பது குடும்பம்

காங்கிரஸ் கட்சி என்பது ஒரு குடும்பம் மாதிரி இந்த குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வராமல் ஒற்றுமையாக செயல்படுவோம். கட்சித் தலைமை சொல்வதைக் கேட்டு முடிவெடுப்போம்.

பாட்டி வழியில் பேத்தி

கணவர் முத்துக் கிருஷ்ணன் ஐ.டி. ஃபீல்டில் இருக்கிறார். இரண்டு பிள்ளைகள், பள்ளிப் படிப்பில் இருக்கிறார்கள். நான் பி.ஏ. பட்டதாரி. என் குடும்பம், கணவர் என்று அனைவருமே காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவர்கள்தான். இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளதற்கு அனைவருக்குமே சந்தோசம்தான். பாட்டி எந்த வழியில் சென்றார்களோ அந்த வழியை பின்பற்றுவேன் என்று கூறியுள்ள ஜான்சிராணி, டெல்லி சென்று கட்சித்தலைவர்களை சந்தித்து நன்றி கூறிய பின்னர் பதவி ஏற்க இருக்கிறேன்.

கண்டிப்பாக ஜெயிப்போம்

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவி பதவி கிடைத்துள்ளது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளைப் பார்த்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படும். கண்டிப்பாக வரும் சட்டசபை தேர்தலில் மிகச்சிறப்பான வெற்றியை பெறுவோம் என்று நம்பிக்கை தெறிக்க பேசுகிறார் ஜான்சிராணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+