மதுரையில் யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மின்சாரம் தாக்கி பலி
திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி அருகே யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மின்சாரம் தாக்கி பலியாகினார்.
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே யானை மீது அமர்ந்து சென்ற பாகன் மீது மின்சார வயர் உரசியதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (24). இவர் தல்லாகுளத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வளர்க்கும் யானையின் பாகனாக 10 ஆண்டுகளாக இருந்தார். 10 நாட்களுக்குமுன்பு தான் இவருக்கு காதல் திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 7:30 மணிக்கு திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி பகுதியில் யானையின் மேல் அமர்ந்து கொண்டு, அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மின் வயர் மீது அவரது உடல் உரசியது. இதனால் அவர் மீதும், யானையின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதையடுத்து யானையின் மீது உட்கார்ந்திருந்த பாகன் ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டார். யானை தரையில் விழுந்தது. பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். தரையில் விழுந்த யானை திடீரென எழுந்து ஓடி தறிகெட்டு ஓடியது. பின்னர் திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் மரங்கள் இருந்த இடத்தில் நின்றது. துணை பாகன்கள் யானையை மரத்தில் கட்டிப்போட்டனர். இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications