அன்புமணி ராமதாஸ் வீட்டில் இளம்பெண் தற்கொலைக்கு காரணம் என்ன? புதிய தகவல்கள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் சென்னை வீட்டில் வேலை செய்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காதல் விவகாரம்தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர் திலக் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. வீடு உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பாடிநாகவேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற கோதண்டன் மகள் மாலினி (வயது 19) வேலை செய்து வந்தார்.

இவர் தந்தை கண்ணன் இறந்துவிட்டார். தாய் பட்டு இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் மூலம் அன்புமணி ராமதாஸ் வீட்டில் கடந்த 11 மாதங்களுக்கு முன் மாலினி வேலைக்குச் சேர்ந்தார்.
அவருக்கு அன்புமணி வீட்டின் முதல் தளத்தில் தங்குவதற்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலினி கடந்த வியாழக்கிழமை தனது ஊரில் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை திருவிழாவில் பங்கேற்பதற்காக அன்புமணி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து மாலினி ஞாயிற்றுக்கிழமை காலை அன்புமணி வீட்டுக்கு திரும்பி வந்தார். அன்று வழக்கமான பணியில் ஈடுபட்ட மாலினி நேற்று காலை 7.30 மணிக்கு பின்னரும் பணிக்கு வரவில்லையாம்.
இதையடுத்து மாலினி அறையை பார்க்க அங்கு பணிபுரியும் அரக்கோணம் வடக்கண்டிகை சின்ன சைனாபுரத்தைச் சேர்ந்த அன்புமணி என்பவர் பார்க்கச் சென்றார். அவர் ஜன்னல் வழியாக மாலினி தங்கியிருந்த அறையை எட்டிப் பார்த்தபோது மாலினி அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது பெங்களூரில் ஓட்டுநராக இருக்கும் மேகநாதன் என்பவருக்கும் மாலினிக்கும் பழக்கம் இருந்துள்ளது; தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மேகநாதனிடம் மாலினி கெஞ்சியுள்ளார். இது தொடர்பாக தாயார் பட்டுவுடனும் மாலினி சண்டை போட்டிருந்தாராம்..
ஞாயிற்றுக்கிழமை இரவு வெகுநேரம் மேகநாதனிடம் செல்போனில் மாலினி பேசியிருக்கிறார்.. இந்த விவகாரத்தில்தான் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது பெங்களூருவில் உள்ள மேகநாதனை போலீசார் சென்னைக்கு வரவழைத்துள்ளனர். மாலினின் தாய் பட்டுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications