மலர்கள் நனைந்தன பனியாலே... மனங்கள்...? சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைத்ரேயன் எம்பி
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை கிடைத்தவுடன் இணைந்து விட்டதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை கிடைத்தவுடன் இணைந்து விட்டதாகவும் மதுசூதனனை வெற்றியடைய செய்வோம் என்றும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அந்த அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மனங்கள் இணையவில்லை
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் அதிமுக அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் மனங்கள் இணையவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மைத்ரேயனின் சொந்த கருத்து என்று லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை கூறியபோது இது எனது சொந்த கருத்து இல்லை, ஒட்டுமொத்த தொண்டர்களின் பிரதிபலிப்பு என்றார்.

மைத்ரேயன் எழுப்பினார்
ஓபிஎஸ் அணியை தனித்து பார்ப்பதாகவும் மைத்ரேயன் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்ட போதும் மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் தரப்பினர் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அதையும் மைத்ரேயனே எழுப்பினார். இந்நலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர்
இதுகுறித்து தந்தி டிவிக்கு மைத்ரேயன் எம்.பி. அளித்த பேட்டியில் கூறுகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை வேட்பாளர் மதுசூதனன் வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்குகிறார். இன்றைய தினம் மாலை முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர்
இதுகுறித்து தந்தி டிவிக்கு மைத்ரேயன் எம்.பி. அளித்த பேட்டியில் கூறுகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை வேட்பாளர் மதுசூதனன் வீடு வீடாக சென்று பிரசாரத்தை தொடங்குகிறார். இன்றைய தினம் மாலை முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளனர்.

ஓரணியில் தேர்தல்
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு வாக்குச் சாவடிகள் பிரித்து வழங்கப்பட்டு விட்டன. இரு அணிகளும் பிரிந்திருந்தன சூழ்நிலை அன்று வேறு. இருவரும் ஓரணியிலே திரண்டு இன்று தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
|
இலையால் மனங்கள் இணைந்தன
மலர்கள் நனைந்தன பனியாலே... மனங்கள் இணைந்தன இலையாலே...இந்த தேர்தலில் மதுசூதனனை வெற்றி பெறச் செய்து அவரை சட்டமன்ற உறுப்பினராக்குவதுதான் ஜெயலலிதாவுக்கு நாங்கள் செய்யும் காணிக்கை.
இதற்காக அனைத்து தியாகங்களையும் செய்து கழகம் ஒன்றுபட்டு வெற்றியை சூடுவோம் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications