Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உலுக்கிடுச்சே".. பரிதாப பெண்.. அந்த "மைனர்" செய்த காரியம்.. படக்குனு இப்படி பண்ணிட்டாங்களே.. ஷாக்

தென்காசியில் 17 வயது சிறுவன் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: கொடுமையை பார்த்தீங்களா.. பொண்ணுக்கு வயசு 15 ஆகிறது.. மாப்பிள்ளைக்கு 17 வயதாம்.. இப்படியே ஜோடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே போயிருக்கிறார்கள்..!!!
இலங்கைபோரின்போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.. இவர்களில் பலர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள்.

அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது போகநல்லூர் என்ற பகுதி.. இங்கு இலங்கை வாழ் தமிழர்கள் அகதிகள் முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 உருகி உருகி காதல்

உருகி உருகி காதல்

இந்த முகாமை சேர்ந்த 15 வயதான சிறுமியை, ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள 17 வயதான சிறுவன் காதலித்துள்ளான்.. இருவருமே உருகி உருகி காதலித்து, இறுதியில் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டனர்... இதனிடையே, முகாமில் தங்கியிருந்த சிறுவனை திடீரென காணவில்லை என்பதால், அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.. அதனால் வேறு ஏதோ ஆபத்து சிறுவனுக்கு வந்திருக்கலாம் என்று பயந்துபோன குடும்பத்தினர், க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் தந்தனர்.. அந்த தகவலின் அடிப்படையில், மண்டபம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்... சிறுவனையும் தேடி வந்தனர்.

 சரண் - தஞ்சம்

சரண் - தஞ்சம்

இந்நிலையில், காணாமல் போன 17 வயது சிறுவன், தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குள் திடீரென நுழைந்தான்.. அப்போது அவனுடன் அந்த 15 சிறுமியும் இருந்தார்.. அவர்களிடம் என்ன ஏதென்று போலீசார் விசாரித்தபோது, தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அதற்காகவே தஞ்சம் அடைந்துள்ளோம் என்று சொல்லி போலீசாரை அதிர வைத்துள்ளனர்.. இதனால் செய்வதறியாது திகைத்து போன போலீஸார், உங்கள் வீடுகளில் உள்ள பெரியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தைகள் நடத்துகிறோம் என்று சொல்லி, அவரவர் வீடுகளுக்கு தகவல் சொன்னார்கள்..

பிஞ்சுகள்

பிஞ்சுகள்

பின்னர் இருவரது பெற்றோர்களையும் ஸ்டேஷனுக்கும் வர சொன்னார்கள். அதேபோல, இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் போலீசார் தகவல் தந்தனர்.. இதையடுத்து மொத்தபேரும் திரண்டு வந்தனர்.. இதில், 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன் மீது குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.. இப்படித்தான் சென்னையிலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.

 உனக்கு 15, எனக்கு 17

உனக்கு 15, எனக்கு 17

15 வயது சிறுமி, 17 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் ஒன்று வந்தது. உடனே இதுகுறித்து விசாரணை நடத்தும்படி ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நலக்கழு உறுப்பினர் காருண்யா தேவிக்கு குழந்தைகள் அமைப்பு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து காருண்யா தேவி மற்றும் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் பகுதியில் தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வரும் 15 வயது சிறுமி, அவளுடன் படித்துவரும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தது தெரியவந்தது.

 நெற்றி குங்குமம்

நெற்றி குங்குமம்

இந்த சிறுமி வீட்டை விட்டு அடிக்கடி வெளியேறி சிறுவனுடன் பல இடங்களுக்கு சென்று பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், திடீரென ஒருநாள், புளியந்தோப்பு பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் வாசலில் வைத்து சிறுவன் அந்த சிறுமிக்கு தாலியும் கட்டியிருக்கிறார்.. அந்த வீடியோவாக எடுத்து, தங்களுடைய நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.. அந்த வீடியோவில், சிறுவன், சிறுமியை தாலி கட்டி, அந்த பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து, அழைத்து செல்வதை பார்த்து இணையவாசிகள் கொந்தளித்துவிட்டனர்.

 புளியந்தோப்பு

புளியந்தோப்பு

உடனே இதுகுறித்த விசாரணையும் நடந்தது.. அதில், சிறுமி அந்த சிறுவனுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. புளியந்தோப்பு மகளிர் போலீசில் புகார் தரப்பட்டு விசாரணையும் நடந்த நிலையில், இந்த சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. பள்ளிப் பருவத்திலேயே தாலியை கட்டிக்கொண்டு, இந்த குழந்தைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது, வருங்கால சந்ததியினர் எதை நோக்கி பயணிக்கின்றனர் என்ற கேள்வியையும், அச்சத்தையும், கலக்கத்தையும் பெற்றோர்கள் மத்தியில் உண்டுபண்ணி வருகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+