For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனபாலை முதல்வராக்க முன் வந்தால் சமரசம் பேசத் தயார்- திவாகரன்

சபாநாயகர் தனபாலை முதல்வராக ஏற்றுக்கொண்டால் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார் என்று திவாகரன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் தங்களின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று சசிகலாவின் சகோதரன் திவாகரன் தெரிவித்துள்ளார்.

தனபாலை முதல்வராக்கினால் சமரசம் பேச தயார் என்றும், பழனிச்சாமி, பன்னீர் செல்வம் இல்லாத அமைச்சரவையை உருவாக்குவோம் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

Make Dhanapal as the CM, demands Divakaran

தஞ்சாவூரில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'சபாநாயகர் தனபாலை முதல்வராக ஏற்றுக்கொண்டால் சமரச பேச்சுவார்த்தைக்கு தயார்.

நீட் தேர்வு உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். அந்தப் போராட்டத்தில் தங்களின் ஆதரவாளர்கள் பங்கேற்பாளர்கள்.

கட்சிக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் களைஎடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

சசிகலா மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்பது முன்னரே எதிர்பார்த்தது தான் என்று தெரிவித்தார்.

English summary
Divakaran has demanded that speaker Dhanapal should be made CM to make compromise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X