மதிமுகவினரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர்: சிவசேனாவினர் மீது மல்லை சத்யா புகார்
சென்னை: மதிமுகவினரை சிவசேனா கட்சியினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக மல்லை சத்யா குற்றம் சாட்டினார். முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு காரில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராடுவதால் மதிமுகவினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மதிமுக அலுவகத்தை இன்று சிவசேனா முற்றுகையிடுவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை எழும்பூரில் மல்லை சத்யா தலைமையில் மதிமுக தொண்டர்கள் குவிந்தனர். கையில் உருட்டுக்கட்டையுடன் மதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, மதிமுக-வினரை சிவசேனா கட்சியினர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக குற்றம் சாட்டினார். முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு காரில் வந்ததாகவும், போலீஸ் பாதுகாப்புடன் சிவசேனா கட்சியினர் வந்ததால் இது அரசு ஏற்பாடாக இருக்குமோ என ஐயப்படுவதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதுக்கடைகளுக்கு எதிராக போராடுவதால் மதிமுக-வினர் மீது தாக்குதல் நடத்த திட்டம் என மல்லை சத்யா குற்றம் சாட்டினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications