ஆடுகளைக் கடித்தால் கோபம்... வேட்டை நாயை விஷம் வைத்துக் கொன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

விராலிமலை: விராலிமலை அருகே வேட்டை நாயை விஷம் வைத்துக் கொன்ற நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

விராலிமலை அருகே உள்ள கோடங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகா நாயக்கர். இவர் நான்கு வேட்டை நாய்களை வளர்த்து வருகிறார். இவரது வேட்டைநாய்கள் அதே பகுதியில் வளர்க்கப்படும் சில ஆடுகளைக் கடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

Man arrested for killing dog

இந்நிலையில், நேற்று இவரது வேட்டை நாய்கலில் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது. அதன் அருகிலேயே மற்ற மூன்று நாய்களும் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப் பட்டன.

இது தொடர்பாக முருகாநாயக்கர் விராலிமலை போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நாய்கள் விஷம் கலந்த இறந்த ஆட்டின் இறைச்சியைச் சாப்பிட்டது கண்டுபிடித்தது.

அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி(40) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். வேட்டை நாய்கள் தனது ஆடுகளைக் கடித்த ஆத்திரத்தில் அவர் இவ்வாறு செய்தது போலீசில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+