"பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க, போதும் வேணாம்.." மறுத்த கள்ளக்காதலி.. வெட்டிக் கொன்ற ராமு!
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை கொன்றவர் அதிரடி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

உளுந்தூர்பேட்டை: "பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க.. இனிமே இதெல்லாம் வேணாம்" என்று சொன்ன கள்ளக்காதலியை தாறுமாறாக கத்தியால் வெட்டி கொன்றுள்ளார் ஒருவர்!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொடிபவுனு. இவருக்கு வயது 40. கணவனை இழந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களை காப்பாற்ற கூலி வேலை செய்து பிழைப்பை ஓட்டிவந்தார் கொடி பவுனு.
இந்த நிலையில் கொடிபவுனுவுக்கும், குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்கிற லட்சுமணனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது விரைவில் கள்ளக்காதலாக மாறியது. ராமுவுக்கு வயது 32. அடிக்கடி மகள்கள் இல்லாத சமயத்தில் ராமு கொடிபவுனின் வீட்டுக்கு போவதும், வருவதுமாக இருந்தார். இதை கண்டுபிடித்த கொடிபவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

பெரியவர்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு ராமுவை பார்க்க குமாரமங்கலம் சென்றார். அப்போது ராமுவிடம், "என் பொண்ணுங்க வளர்ந்துட்டாங்க. அவங்க பெரியவர்களாகிவிட்டதால், இனிமேல் என்னை தேடி வராதே, இதெல்லாம் வேணாம்" என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அழுதுகொண்டே சென்றார்
இதுதான் தகராறாக வெடித்திருக்கிறது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்காமல் கொடிபவுனு அழுதுகொண்டே வீட்டுக்கு போய்விட்டார். கொடிபவுனு அழுதுகொண்டே வீட்டுக்கு செல்லவும், அவரை சமாதானம் செய்வதற்காக ராமு நேற்று சிறுவத்தூர் கிராமம் சென்றார்.

அரிவாளால் வெட்டினார்
கொடிபவுனிடம் ராமு சமாதானம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் வாக்குவாதம்தான் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமு, கொடிபவுனை கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். மகளை வெட்டுவதை பார்த்த கொடிபவுனுவின் தாய் ராசாத்தி ராமுவை தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்ட ராமு, திரும்பவும் கொடிபவுனுவை அரிவாளால் வெட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொடிபவுனு கீழே சரிந்து விழுந்து துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். இதை பார்த்த ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

3 மணி நேரம்
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடிபவுனுவின் உடலை கைப்பற்றி, தப்பியோடிய ராமுவையும் தனிப்படை அமைத்து தேட ஆரம்பித்தனர். ஆனால் கொலை நடந்த 3 மணி நேரத்திற்குள்ளேயே உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருந்த ராமுவை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications