ஐயா வந்துருவாரா.. நக்கலாக கேட்ட நபரை தாக்கிய திமுக தொண்டர்கள்.. காவிரி மருத்துவமனையில் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஐயா வந்துருவாரா என்று நக்கலாக கேள்வி எழுப்பிய நபரை காவிரி மருத்துவமனை அருகே, திமுக தொண்டர்கள் அடித்து உதைத்தனர்.
சென்னை காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இன்று 4வது நாளாக சிகிச்சை தொடர்கிறது.
இதையடுத்து மருத்துவமனை வெளியே, தொண்டர்கள் பலரும் குழுமியிருந்து வாழ்க கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.

நக்கலாக கேள்வி
இன்று மதியம், இப்படி குழுமியிருந்த தொண்டர்களை அணுகிய, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், ஐய்யா வந்துவிடுவாரா என கேலியாக கேள்வி எழுப்பினாராம். இதனால் தொண்டர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அதில் சிலர் அந்த நபரை பிடித்து அடிக்க தொடங்கியதால் அங்கு பெரும் கூச்சல், சத்தம் எழுந்தது.

திட்டி தீர்த்த பெண்மணி
கருப்பு சிவப்பு வண்ணத்தில் சேலை கட்டிய பெண் தொண்டர் ஒருவர், அந்த நபரை பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டார். நாங்கள், எழுந்து வா என கோஷம் போட்டபடி இருக்கிறோம். ராத்திரி பகலாக இங்கேயே தங்கியிருக்கிறோம். இவர் என்னடான்னா, ஐயா வந்துடுவாரா என நக்கலாக கேள்வி எழுப்புகிறார் என்று சத்தம் போட்ட காட்சிகள் அங்கிருந்த ஊடகத்தாரின் கேமராக்களில் பதிவாகியுள்ளது.

அடி, உதை
இதையடுத்து ஆண் தொடர்கள் சிலர் அந்த நபரை அடித்து தள்ளி விட, அப்போது போலீசார் அங்கு வந்து, அந்த நபரை மீட்டு வெளியே போகச் சொல்கிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இப்படி பேசினால் அடிப்பார்கள், பேசாமல் போய்விடு என ஒரு இளைஞர், அந்த நபரிடம் எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது.

குவிந்த தொண்டர்கள்
காவிரி மருத்துவமனை வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு திமுக சார்பில் இலவச உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களும் அங்கேயே குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications