வெள்ளைத்தழும்பை பார்த்து ஒதுக்கிய 60வயது மனைவி - எரித்துக்கொன்ற 65 வயது கணவன்
அறுபதிலும் ஆசை வரும் ஆனால் மனைவி மீது சந்தேகம் வந்து கொலை செய்து இருக்கிறார் 65 வயதான கணவர் ஒருவர். அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
திருப்பத்தூர்: விடியும் என்ற நம்பிக்கையில் கணவருடன் படுக்கை அறையில் உறங்கப்போன அந்த பெண்மணி அன்றைக்கு இரவே தனது கடைசி இரவாகும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது கணவனே எமனாகி விட்டார். காரணம் சந்தேகமும் மன உளைச்சலும்தான். நாற்பது வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து கடைசியில் தனது மனைவியை எரித்து கொலை செய்து விட்டு இப்போது சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் சேஷாசலம்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மல்லிகா, வயது 60. கொலை செய்த நபரின் பெயர் சேஷாசலம், வயது 65. இவரும் திருப்பத்தூரில் தியாகி சிதம்பரனால் தெருவில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி 40 வருடங்கள் ஆகிவிட்டது.

இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். மூவருக்குமே திருமணம் செய்து தனித்தனியாக அவரவர்கள் குடும்பத்தினர் வசித்து வர, மல்லிகாவும், சேஷாசலமும் மட்டும் சிதம்பரனார் தெருவில் வசிக்கின்றனர் சேஷாசலம் நகை அடகுக்கடையில் வேலை செய்து வந்தார்.
வீட்டுக்கு வீடு வாசப்படி போல வயதான பின்னாரும் தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. காரணம் சேஷாசலத்திற்கு உடம்பில் வெள்ளைப்புள்ளிகள் ஏற்பட்டு முகத்திலும் பரவியதாம். அதை சொல்லிக்காட்டி மல்லிகா பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளானார் வேதாசலம். என்ன செய்வது என்று யோசிக்க யோசிக்க மனைவி மீது ஆத்திரம் அதிகமானது. கொலை செய்து விடுவதுதான் ஒரே தீர்வு என்று நினைத்து. இரவு நேரத்தில் காரியத்தை முடித்து விடலாம் என்று திட்டம் போட்டார்.
வழக்கம் போல இருவரும் இரவு உறங்கப்போனார்கள். நேரம் பார்த்து காத்திருந்த சேஷாசலம் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் பொசுங்கி இறங்கி போனார் மல்லிகா. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேஷாசலத்தை கைது செய்தனர். மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் மனைவியை கொன்றது ஏன் சொன்னார் சேஷாசலம், மல்லிகா எப்போது போனில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருப்பாராம். தனது வெள்ளைத்தழும்பை குத்திக்காட்டி பேசி அறுவெறுப்பு படுவாராம். இதனால்தான் கொலை செய்தேன் என்று கூறினார். 40 வருட திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து இறந்து விட்டார் மல்லிகா. இப்போது யாருமில்லாத அநாதையாக சிறைச்சாலையில் இருக்கிறார் சேஷாசலம்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications