பூக் கடை வியாபாரியின் உயிரைக் குடித்த கந்துவட்டி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், கந்து வட்டி தொல்லையால் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் அனவரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். கடன் தொல்லை காரணமாக நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நெல்லை டவுன் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, வையாபுரி நகரை சேர்ந்தவர் கணேசன் என்பவரிடம் சுப்பிரமணியன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.இதற்காக தினமும் ரூ.300 வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் கணேசன் சுப்பிரமணியனை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மனம் உடைந்த சுப்பிரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய கணேசனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications