கூடலூர் அருகே பெண்ணைக் கொன்று 'கிலி' ஏற்படுத்திய புலி சுட்டுக் கொலை
ஊட்டி: ஊட்டி அருகே பெண்ணைக் கடித்துக் கொன்ற புலியை அதிரடிப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில், சிகிச்சை பலன் அளிக்காமல் பெண் இறந்தார்.

இதையடுத்து, அந்தப் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன்படி, புலியை பிடிக்க 10 அதிரடிப்படை பிரிவுகள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், கூடலூர், பிதர்காடு பகுதியில் பதுங்கியிருந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்த புலியை உயிரோடு பிடிக்க முடியாததால் சுட்டுக் கொன்றதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டும் உதகை அருகே 3 பேரைக் கொன்ற புலி ஒன்று கப்பச்சி பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications