Ooty Tiger: ஊட்டியில் போக்கு காட்டிய T37 புலி! வண்டலூருக்கு கொண்டு வரும் வனத்துறை!

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: உதகை அருகே கடந்த மாதம் மூதாட்டியை அடித்துக் கொன்ற T37 என்ற ஆட்கொல்லி புலி சிக்கிய நிலையில் தற்போது அது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பழங்குடியின பெண்ணை ஒரு புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து புலியை தேடி வந்தனர்.

vandalur tiger

இதற்காக ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 15 நாட்களுக்கு மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது.

இந்த புலிக்கு 14 வயது என்றும் ஆண் புலி என்றும் தகவல்கள் கிடைத்தன. அந்த ஆட்கொல்லி புலியை சென்னை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆட்கொல்லி புலி வனத்துறையின் கூண்டில் சிக்கியதால் மாவனல்லா பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் அந்த புலியை தங்களிடம் காட்டுமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+