சென்னையில் ரயில்மோதி ஒடிஷா கைதி பலி: போலீசிடம் இருந்து தப்பிய போது பரிதாபம்!
சென்னை: ஒடிஷா காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடிய கைதி ஒருவர் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆதம்குமார்நாயக் என்பவர் மீது அம்மாநிலத்தின் உதயகிரி காவல் நிலையத்தில், வழிப்பறி உட்பட, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் ஒடிஷாவில் இருந்து கேரளா தப்பிச் சென்று தலைமறைவாக இருந்தார். அவரை ஒடிசா போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர் கன்னியாகுமரி- ஹவுரா ரயிலைப் பிடிப்பதற்காக தாம்பரம் ரயில் நிலையத்துக்கு கைதியுடன் போலீசார் சென்றனர். அங்கு ஐந்தாவது நடைமேடையில் போலீசாருடன் காத்திருந்த போது கைதி ஆதம்குமார்நாயக் திடீரென தப்பி ரயில் பாதையில் இறங்கி ஓடினார்.
அப்போது கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி ஆதம்குமார்நாயக் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தப்பி ஓடிய போது விபத்தில் உயிரிழந்து விட்டாரா என்று தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications