சசிகலா பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்த தூத்துக்குடிக்காரர் கைது
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார்(52) என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா எனது மனைவியின் சொந்தக்காரர் என்று கூறி வந்துள்ளார். மேலும் தனது மனைவி மூலம் சசிகலாவிடம் தெரிவித்து உங்களுக்கு அரசு வேலை, டெண்டர், துறைமுகத்தில் பணி வாங்கித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவரை நம்பி வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கும்போது அவர் சசிகலாவிடம் போனில் பேசுவது போல் நடித்து வந்துள்ளார். அவரை நம்பி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விஜயகுமாரிடம் வேலைக்காக கோடிக் கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
விஜயகுமார் கடந்த 5 ஆண்டுகளாக பலரை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் ஏமாந்தவர்களில் சிலர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர் விஜயகுமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சசிகலாவின் பெயரைச் சொல்லி பலரை மோசடி செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications